தேவையான பொருள்கள் :
பச்சைமிளகாய் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தனியா தூள் – 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் (பொடித்தது) – 4 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் துருவல் – 5 மேஜைக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
கடுகு – 1 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 மேஜைக்கரண்டி
செய்முறை :
* பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியா நறுக்கிக் கொள்ளவும்.
* இரண்டும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும்.
* புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
* தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்து வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்தபின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், தனியா பொடி, மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க
விடவும்.
* மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* காரம்
அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
* சுவையான மிளகாய் பச்சடி ரெடி. பச்சை மிளகாய் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்து சில நாட்கள் வரை கெடாமல் உபயோகிக்கவும்.
இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.