bl0Y23w
சிற்றுண்டி வகைகள்

பச்சைமிளகாய் காரச் சீடை

என்னென்ன தேவை?

பதப்படுத்திய பச்சரிசி மாவு – 2-1/2 கப்,
வறுத்து அரைத்து சலித்த உளுந்துமாவு – 1/4 கப்,
பச்சைமிளகாய் – 10,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – தேவைக்கு,
வெண்ணெய் – 3/4 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் மாவுடன் கலக்க – தேவைக்கு,
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை பச்சரிசி, உளுத்தமாவுடன் சேர்த்து கலக்கவும். அதில் எள், வெண்ணெய், தேங்காய்ப்பால் தெளித்து பதமாக மாவைப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியின் மீது பரப்பி 2 மணி நேரம் வைக்கவும். ஒரு மெல்லிய துணியால் மூடி வைக்கவும். சூடான எண்ணெயில் சீடைகளை ஒட்டாமல், கொள்ளும்வரை போட்டு மொறுமொறுவென்று பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வடித்து ஆறவிட்டு டப்பாவில் வைத்து படைத்து பரிமாறவும்.

(குறிப்பு: வெடிக்காமல் இருக்க மாவை மிக சிறு ஓட்டை உள்ள சல்லடையில் பல முறை சலிக்கவும்.)bl0Y23w

Related posts

வரகு பொங்கல்

nathan

ஐந்தே நிமிடங்களில் வெஜிடபிள் சேமியா செய்யலாம்!

nathan

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

nathan

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

சீனி வடை

nathan

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

nathan

எக் பிரெட் உப்புமா

nathan

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

nathan