தேவையானவை ;
பாசி பருப்பு 100 கிராம்
உருளை கிழங்கு – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
காலிபிளவர் – ஒன்றில் பாதி
பீன்ஸ் – 50 கிராம்
முருங்கைக்காய் – ஒன்று
பூண்டு – 50 கிராம்
பச்சை மிளகாய் – ஏழு
தேங்காய் – ஒன்று
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் / எண்ணெய் 50 கிராம்
எலுமிச்சம் பழம் ஒன்றில் பாதி
உப்பு தேவையான அளவு
செய்முறை :
தேங்காயை மிக்சியில் அரைத்து வடிகட்டி முதல் பால் , இரண்டாம் பால் என எடுத்து வைத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை குழையாமல் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.கடாயில் நெய் ஊற்றி உருகியதும் இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலினை ஊற்றி அதனுடன் நீளமாக நறுக்கிய காய்களை சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும் முதலில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலினை சேர்த்து சீரகம் . கறிவேப்பிலை போட்டு தாளித்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.