இந்த நாகரிக உலகில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் தங்களது அழகில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். பெண்களை போலவே ஆண்களுக்கும் தலைமுடி பிரச்சனை, சரும பிரச்சனைகள் வருவது உண்டு.
ஆனால் பெண்கள் அளவிற்கு ஆண்கள் இதற்கு நேரம் ஒதுக்கி சரிசெய்வது இல்லை. இதுபோன்ற ஆண்களுக்கும், அழகாக விரும்பும் ஆண்களுக்கும் ஒருசில குறிப்புகள் குடுத்துள்ளளோம். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.
பொதுவாக ஆண்களில் பெரும்பாலானோர் சேவிங் செய்வது வழக்கம். அவ்வாறு சேவிங் செய்யும் ஆண்கள் காலையில் தூங்கி எழுந்ததும், பிரஸ் செய்துவிட்டு சேவிங் செய்வார்கள். பிறகுதான் குளிக்க செய்வார்கள். இவ்வாறு செய்வதை நிறுத்திவிட்டு குளித்தபிறகு சேவிங் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் சரும துளைகள் விரிவடைந்து உங்கள் முகம் மேலும் பிரகாசமடையும்.
ஷேவிங் க்ரீமிற்கு பதிலாக கண்டிஷனர் :
பொதுவாக சேவிங் செய்தபிறகு முகம் வறட்சியடையாமல் இருக்க சேவிங் க்ரீம் தடவுவது வழக்கம். அவ்வாறு சேவிங் க்ரீம் தடவுவதற்கு பதிலாக கண்டிஷனர் தடவி பாருங்கள் முகம் பளிச்சென்று மாறும்.
ஷேவிங் காயங்களுக்கு லிப் பாம் :
பொதுவாக சேவிங் செய்யும்போது முகத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு காயங்கள் ஏற்படும்போது லிப் பாம் தடவுங்கள். இதனால் காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் தடுக்கப்படும்.
இதுபோன்று செயல்களை செய்வதன்மூலம் ஆண்களும் பெண்களுக்கு நிகரான பளிச்சென்ற முகத்தினை பெறமுடியும்.