26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
20 1508495797 4
கால்கள் பராமரிப்பு

நக சுத்தியால் கவலையா? இதோ சூப்பர் டிப்ஸ்!

நம்மில் சிலர் நக சுத்தியால் அவதிப்பட்டிருப்போம் அல்லது நக சுத்தியால் அவதிப்பட்டவர்களைப் பார்த்திருப்போம். பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவதையே நக சுத்தி என்று சொல்கிறோம். நம் நகத்தில் உள்ள நிறத்தைப் போக்குவதோடு நக சுத்தி கடுமையான வலியையும் கொடுக்கிறது. நக சுத்தி வந்தால் அதை உடனடியாகக் குணப்படுத்துவது அவசியம்.

இல்லையென்றால் அது செப்டிக்காகி விரலுக்கே ஆபத்தாகி விடும். நக சுத்தியைக் குணப்படுத்த பல மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். இதனால் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் வேறு வழிகளையே நாடுகின்றனர்.

சிலர் பாதிக்கப்பட்ட விரலில் எலுமிச்சம்பழத்தை சொருகி வைத்திருப்பார்கள். நம் வீட்டில் இருக்கும் சில சாதாரணப் பொருட்களைக் கொண்டே நக சுத்தியை எளிதில் குணப்படுத்த முடியும். மருத்துவ ரீதியாக அவை நிரூபிக்கப்படாவிட்டாலும், அவை நக சுத்தியை ஆற்றுகின்றன என்றே சொல்லலாம்.

1. மருதாணி பவுடர் பிளீச்சிங் ஒத்து கொள்ளாமல் கை விரல்களில் நகங்கள் அழுகிவிடும். இதன் பின் விளைவுகள், பல வியாதிகளை உண்டாக்கும். கையில் சிலருக்கு நக சுத்தி வந்து பாடா படுத்தும் புளி, உப்பு போன்ற பொருட்களை 3. இதற்கு எலுமிச்சை பழத்தை கை விரலின் மேல் தொப்பி போல் வைப்பார்கள். இதுவும் பலன் தரும் என்றாலும் கூட அதை விட சிறந்தது என்னவென்றால், மருதாணி பவுடர் தான்.

2. தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி கிராம்பு – நான்கு கடுகு எண்ணை – ஒரு தேக்கரண்டி நீலகிரி தைலம் – ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி டீ தூள் – ஒரு தேக்கரண்டி தண்ணீர் – முக்கால் கப் ச‌ர்க்க‌ரை – அரை தேக்க‌ர‌ண்டி

3. செய்முறை 1. த‌ண்ணீரை கொதிக்க‌ வைத்து அதில் டீ தூளை போட்டு ந‌ன்கு கொதிக்க‌விட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி வ‌டி க‌ட்ட‌வும். 2. ம‌ருதாணியில் , ம‌ஞ்ச‌ள் தூள் சேர்க்க‌வும், கிராம்பை பொடி செய்து சேர்க்க‌வும், எலுமிச்சையை சாறெடுத்து ஊற்றி க‌ல‌க்க‌வும். 3. இதில் வ‌டிக‌ட்டிய‌ டீ டிகாச‌னை தேவைக்கு க‌ல‌ந்து கொள்ள‌வும். 4. க‌டை‌சியாக‌ கடுகு எண்ணை, நீல‌கிரி தைல‌ம் சேர்த்து க‌ல‌ந்து சிறிது நேர‌ம் ஊற‌வைத்து ஆறிய‌தும் அதை கையில் உள்ள‌ ந‌க‌த்துக்கு தொப்பி போல் வைக்க‌வும். 5. இது தொட‌ர்ந்து முன்று நாட்க‌ள் வைக்க‌வும், முத‌ல் நாள் வைக்கும் போதே வ‌லி எல்லாம் குறைந்து விடும். 6. கையும் அழ‌காச்சு,வ‌லியும் போயே போச்சு.இது நான் ப‌ல‌ பேருக்கு சொல்லி கை ந‌க‌ம் ச‌ரியாகி உள்ள‌து.

4. குறிப்பு குளுமை உட‌ம்பு உள்ள‌வ‌ர்க‌ள், ம‌ருதாணி வைத்தால் உட‌னே ச‌ளி பிடிக்கும், தும்ம‌ல் வ‌ரும் என்ப‌வ‌ர்க‌ள், ஒரு ம‌ணி நேர‌த்துக்கு மேல் வைக்க‌ வேண்டாம். அப்ப‌டியே வைத்தாலும், கை ம‌ணிக்க‌ட்டு, க‌ழுத்து ந‌ர‌ம்புக‌ளுக்கு ஏதாவாது ஒரு தைல‌த்தை த‌ட‌வி கொள்ள‌வும். இது நான் நிறைய பேருக்கு சொல்லி விரல் நகம் சரியாகி உள்ளது.

5. கற்றாழை கற்றாழை மிக எளிதாக கிடைக்கும் ஒன்றாகும், மஞ்சள் தினசரி நாம் சமையலில் பயன்படுத்தும் ஒன்று. இது தொற்றுகளை தடுக்கவும், பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா ஆகிவற்றை எதிர்க்கவும் பயன்படுகிறது. கற்றாழை சாறையும் மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணைய் விட்டு சூடு படுத்தி பூசி வர நகசுத்தி குணமாகும்.

6. வினிகர் இது மிகவும் சீப்பான சிகிச்சை ஆகும். ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அந்த நீரில் பாதிக்கப்பட்ட விரல்களை சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். குளிர்ந்த நீர் மற்றும் சுடுநீர் ஆகிய இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். காலை, பகல், மாலை என்று 3 வேளைகளிலும் இவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் கால்களைத் துடைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைட்டமின் ஈ எண்ணெயை தேய்க்க வேண்டும்.

7. உப்பு நீர் நக சுத்தியைக் குணப்படுத்துவதில் உப்பு நீரின் பங்கு அலாதியானது. நீங்கள் கடலோரத்தில் இருந்தால், கடல் நீரில் பாதிக்கப்பட்ட விரல்களை அமிழ்த்தி வைக்கலாம். கடல் நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டில் உள்ள உப்பு நீரைக் கொண்டே முயற்சிக்கலாம். வேறு ஒரு வழியும் உள்ளது. ஒரு பேசனில் விரல் முழுவதும் முழுகுமாறு நீரை ஊற்றவும். பின்னர் அதில் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலக்கவும். சிறிது நேரம் கழித்து பாதிக்கப்பட்ட பகுதியை கல் உப்பில் சுமார் 3 நிமிடங்களுக்கு வைக்கவும். பின்னர் கல் உப்பை பேசனில் போட்டு, அந்த நீரில் விரலை மீண்டும் அரை மணிநேரம் அமிழ்த்தி வைக்கவும். பின்னர், துடைத்து விட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் வினிகரைத் தடவ வேண்டும். நக சுத்தி ஆறும் வரை இதைத் தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும். காலில் நக சுத்தி என்றால் சிறிது நாட்களுக்கு ஷூ அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

8. சோடா உப்பு சோடா உப்பு பசையை பாதிக்கப்பட்ட விரலில் தடவினால் நக சுத்தி குணமாகும். சோடா உப்பில் அல்கலைன் நிறைந்து இருப்பதால், நக சுத்தி ஏற்படக் காரணமாக இருக்கும் பூஞ்சைகளோ பாக்டீரியாவோ மேலும் வளராமல் அதனால் தடுக்க முடியும். ஷூக்களின் உள்ளேயும் சோடா உப்புப் பசையைத் தடவினால், கால் நக சுத்தி நீங்கும்.

9. லெமன் எண்ணெய் ஒரு அவுன்ஸ் தேங்காய் எண்ணெய் அல்லது திராட்சை விதை எண்ணெயுடன் 12 சொட்டுக்கள் லெமன் கிராஸ் எண்ணெயைக் கலந்து பாதிக்கப்பட்ட விரலில் தடவலாம். பூஞ்சை மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் இதில் நிறைந்து இருப்பதால், இது நக சுத்திக்கு இது ஒரு அருமையான மருந்தாகும். ஒரு நாளைக்கு 3 முறை லெமன் கிராஸ் டீ குடித்தாலும் நல்லதே!

10. மஞ்சள் நீரில் மஞ்சள் எண்ணெயை நன்றாகக் கரைத்து அதைப் பாதிக்கப்பட்ட நகத்தில் தடவ வேண்டும். ஒரு நாளுக்கு 3 முறை இதைச் செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும், ஒரு நாளுக்கு 3 முறை 300 மிலி மஞ்சள் எக்ஸ்ட்ராக்டையும் குடித்தால் மிக மிக நல்லது.

11. வேப்ப எண்ணெய் வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பூஞ்சைக்கு எதிரான பண்புகள் வேப்ப எண்ணெயில் மிகுந்து இருப்பதால் இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

12. தேங்காய் எண்ணெய் பொதுவாகவே தேங்காய் எண்ணெய்க்கு காயங்களை ஆற்றும் தன்மை உள்ளது. நக சுத்திக்குக் காரணமான பூஞ்சைகளையும் பாக்டீரியாக்களையும் கொல்வதோடு, நக சுத்தியால் ஏற்படும் வலியையும் தேங்காய் எண்ணெய் குறைக்கிறது.

20 1508495797 4

Related posts

பாதங்களை மிருதுவாக்கனுமா? கருமையான வெடிப்புள்ள பாதங்களை காக்க இதோ டிப்ஸ் :

nathan

கால் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வீட்டு குறிப்புகள்

nathan

பாதவெடிப்பை எப்படி விரைவில் போக்கி வசீகரமான பாதத்தை எப்படி பெறுவது?

nathan

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

nathan

சொர சொரப்புகள் நீங்கி அழகான மிருதுவான கால்களைப் பெற

nathan

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

nathan

குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில் சில டிப்ஸ்!….

sangika

குதிகால் வெடிப்பால் அவஸ்தையா? மெழுகை உபயோகிங்க!!

nathan

அழகான பாதங்கள் பெறுவது எப்படி?

nathan