எல்லோருக்கும் பளபளப்பான சருமம் வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் சருமத்தில் நீரேற்றம் இல்லாத காரணத்தினால் உங்களது சருமம் வறண்டு மற்றும் சோர்வாகக் காணப்படும். எனவே இந்த வறண்ட சருமம் உங்களுக்கு சில சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சிலர் வறண்ட தோலினை உரித்தும் மற்றும் சிலர் மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தி அவை சரியான ஈரப்பதத்தினை தராத காரணத்தினாலும் சற்று எரிச்சல் அடைந்து இருப்பார்கள்.
எனவே இதற்குச் சிறந்த தீர்வாகப் பட்டர் உதவும். வெண்ணையில் மிக அதிக அளவில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து உள்ளதால் இது உங்கள் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மற்றும் ஒளிரும் தன்மையுடையதாகவும் மாற்றும் பண்பினை கொண்டுள்ளது.
வெண்ணெய் மற்றும் வாழைப்பழம்
வாழைப்பழம் மற்றும் வெண்ணெய் கலந்த கலவை உங்கள் முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பினைத் தரும். ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய், வாழைப்பழத்தை எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் பட்டர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை ஒரு பிரஷ்சினை பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் வெண்ணெய்
வெள்ளரிக்காய் மற்றும் வெண்ணெய் இரண்டும் சேர்ந்த கலவை உங்கள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பு நிற தோல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்க உதவும். ½ வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து, வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது கலவையை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் 2 முதல் 3 முறை செய்தால் விரைவில் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தினை பெறலாம்.
ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய்
ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய் இரண்டும் கலந்த கலவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதுப்பிக்கிறது. அத்துடன் ரோஸ் வாட்டர் சருமத்தினை நீரேற்றமாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து ஒரு சுத்தமான கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து காட்டன் பஞ்சினை எடுத்து அதில் நனைத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம். இவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றோ அதனைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.