துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவனாவார். இவர்கள் தராசு போல எதையும் சீர்தூக்கி பார்க்கும் குணம் கொண்டவர்கள். இவர்கள் எந்த வியாபாரம் செய்தாலும் அதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் இருக்கும். எதையும் ஒன்றுக்கு இரண்டு மோரை யோசித்து செய்வார்கள். செல்வம் சேர்ப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள். முன்ஜாக்கிரதை குணம் அதிகம் இருக்கும். வாழ்க்கையை சுகபோகமாக வாழ விரும்புவார்கள். இவர்கள் நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.
துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் சற்று சபல புத்தி கொண்டவர்கள். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனமானவர்கள். பெண்களாக இருந்தால் ஆண்களால் பல பிரச்சினைகள் ஏற்படும். இவர்கள் அழகான உருவ அமைப்பை கொண்டவர்கள். பிறரை கவர்ந்து இழுக்கும் அளவுக்கு இவர்களின் பேச்சாற்றல் இருக்கும்.
தன்னை அழகாக காட்டி கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அழகுக்காக நிறைய செலவு செய்வார்கள். ஆடம்பரமாக இருக்க ஆசைபடுவார்கள். சுற்றுலா, கூத்து, கேளிக்கை இவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். பொதுவாக கோபப்படமாடார்கள். ஆனால் கோபம் வந்தால் யாராக இருந்தாலும் ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள்.
இவர்கள் உடனிருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களிடம் பேசுவதையோ, பழகுவதையோ முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். இவர்கள் ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவர்களை எடை போட்டு விடுவார்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். எதையும் ரசித்து ருசித்து உண்ண வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்பாக இருக்க ஆசைப்படுவார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தவறுகளை சுட்டி காட்டமல் நாசுக்காக இப்படி இருந்தா நல்லாருக்குமே என அழகாக மற்றவர்களுக்கு எடுத்து சொல்வார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய வியாபாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நடிகர்களாகவும் கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு பிரதிபலன் பாராமல் உதவ கூடியவர்கள். பயணம் செய்வது என்பது இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. இவர்கள் ஜாதகம், ஜோசியம் போன்றவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள். குடும்ப பொருளதாரத்திற்காக குடும்பத்தை விட்டு விலகி, தொலைதூர இடத்தில் இவர்கள் வசிப்பார்கள்.
இவர்கள் குழந்தைப் பருவத்தை விட வாழ்க்கையின் பிற்பகுதியில் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் சிறந்த நிர்வாகியாக விளங்குவார்கள். இவர்கள் சொல்லுக்கு சமுகத்தில் எப்போதும் ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும்.