28.6 C
Chennai
Tuesday, Nov 5, 2024
kambumurukku 1634985076
இனிப்பு வகைகள்

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு

தேவையான பொருட்கள்:

* கம்பு மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* கடலை மாவு – 1/8 கப்

* பொட்டுக்கடலை மாவு – 1/8 கப்

* உருக்கிய வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சூடான எண்ணெய் – 1 டீஸ்பூன்

* எள்ளு விதைகள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து மாவுடன் எள்ளு விதைகள், மிளகாய் தூள், உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதை கையால் ஒருமுறை கையால் கிளறிவிடுங்கள். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் உங்களுக்கு வேண்டிய முறுக்கு அச்சுள்ள தட்டை வைத்து, அதில் எண்ணெய் தடவி, பின் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து மூடிக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதை வேண்டிய டிசைனில் முறுக்கு போன்று ஒரு துணி/கரண்டியின் மேல் பிழிய வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கம்பு முறுக்கு தயார். இதுப்போன்று அனைத்து மாவையும் முறுக்குகளாக பிழிந்து கொள்ளுங்கள்.

Related posts

தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி செய்வது எப்படி

nathan

பால்கோவா: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

nathan

பூசணி விதை பாதாம் பர்பி

nathan

பாதுஷா

nathan

கருப்பட்டி மைசூர்ப்பாகு எப்படி செய்வது

nathan

சுவையான தேங்காய் அல்வா

nathan

பறங்கிக்காய் வெல்ல அல்வா : செய்முறைகளுடன்…!

nathan

இட்லி மாவில் சுவையான ஜிலேபி செய்ய தெரியுமா ?

nathan

தினை அதிரசம்

nathan