qTSJzzoBJp
Other News

தீபாவளி ரேசில் களமிறங்கும் 8 படங்கள்..

கடந்த சில மாதங்களாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் விஜய்யின் “கோட்”, `சூப்பர் ஸ்டார்’ படத்தின் வேட்டையன், விக்ரமின் தங்கலான், தனுஷின் ராயன் போன்ற படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

பின்னர், தீபாவளி நெருங்கி வருவதால், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் சுமார் எட்டு படங்கள் வெளியாகும். எந்தெந்த படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

அமரன்: கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த படம். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை சித்தரிக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரதர்: சிவா மனசுல சக்தி புகழ் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ளனர். கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாகி இருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தற்போது ஜெயம் ரவி தமிழ்நாடு முழுவதும் படு பிஸியாக படத்தை பிரமோஷன் செய்து வருகிறார்.

ப்ளடி பெக்கர்: நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் இப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப பிச்சைக்காரராக அவர் நடித்திருப்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளிக்கு இப்படமும் வெளியாவது மீடியாக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

ஜீப்ரா: ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

லக்கி பாஸ்கர்: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கு மொழியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

கா: சுதீப் மற்றும் சுஜித் இயக்கியுள்ள இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கிறது. கிரண் அப்பாவரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன் சரிகா, தன்வி ராம் என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

பகீரா: டி ஆர் சூரி இயக்கியுள்ள கன்னட படமான இதில் பிரகாஷ்ராஜ், ருக்மணி வசந்த்,, ஸ்ரீ முரளி ஆகியோர் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்திற்கும் கன்னட திரையுலகில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பூல் பூலைய்யா 3: ஹிந்தியில் வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அனீஸ் பஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர் யன் நடித்துள்ள இப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

எனவே, இந்த 8 படங்களும் பண்டிகைக்கு வெளியாகும். எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடிக்கும் என்பதை வரும் வாரங்களில் தெரிந்து விடும்.

Related posts

காலில் விழச் சொன்னாரா தவெக கட்சி நபர்?அழுத பெண் விளக்கம்!

nathan

ஜோவிகா ஏன் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை?

nathan

கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி – டார்ச்சர் பண்ணிய தந்தை

nathan

தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?

nathan

திருமணம் செய்து 21 நாள்களில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

nathan

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்..!

nathan

சுவையான கத்திரிக்காய் தவா ரோஸ்ட்

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

உயர் நீதிமன்றம் கருத்து-நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்:

nathan