வையான ஜாங்கிரி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
- உளுத்தம் பருப்பு – 1 கப்
- அரிசி – 1 மேசைக்கரண்டி
- சர்க்கரை – 1 1/2 கப்
- தண்ணீர் – 1 கப்
- கேசரி கலர்(சிகப்பு (அ) ஆரஞ்ச் – 2 பின்ச்
- ரோஸ் எஸ்ஸன்ஸ் – 2 தேக்கரண்டி
செய்முறை
- அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதற்கு மேலும் ஊற வைத்தால் பொரிக்கும் போது ஜாங்கிரி அதிக எண்ணெய் குடித்து விடும்.
- அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் மிருதுவாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும். மாவு அரைப்பதற்கு 1/4 கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.
- அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு பின்ச் கேசரி கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- மாவு சரியாக அரைத்துள்ளதை அறிய தண்ணீரில் சிறிது மாவை வைத்தால் மாவு மிதக்க வேண்டும்.
- சர்க்கரை பாகு தயாரிக்க
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர்(சர்க்கரை மூழ்கும் அளவு) கலந்து கொதிக்க விடவும். இளம் பாகு பதம் வந்தவுடன் கேசரி கலர் மற்றும் ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- ஒரு தட்டையான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். மிகவும் குறைவாக(1 இன்ச்) போதுமானது. எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.
- ஒரு சுத்தமான துணி அல்லது ஜிப்லாக் கவரில்(திக்கான பாலிதீன் பை) எடுத்துக் கொண்டு அதில் சிறிய ஓட்டை போடவும்(ஒரு கம்பியை லேசாக சூடு செய்து ஓட்டை போடவும்).
- பின் அதில் மாவை நிரப்பி சிறு ஜாங்கிரியாக வேண்டுமெனில் சிறு வட்டங்களாக இரண்டு வட்டங்கள் வருமாறு சுற்றி விடவும்.
- பெரிதாக வேண்டுமெனில் இரண்டு பெரிய வட்டங்களாக சுற்றி, பின் அதன் மேலே சுருள் சுருளாக சுற்றிலும் பிழிந்து விடவும்.
- ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு வேக விடவும்.
- ஜாங்கிரி வெந்தவுடன் அதை கவனமாக எடுத்து சர்க்கரை பாகில் போடவும்(2 நிமிடங்கள்).
- அடுத்து ஜாங்கிரி பொரித்து வரும் வரை சர்க்கரை பாகில் ஊற விட்டு, பின் எடுத்து தட்டில் அடுக்கி விடவும். இதை அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும்.
- சுவையான ஜாங்கிரி தயார்.