தேவையான பொருட்கள்
தினை – 100 கிராம்
தேன் – 5 மேஜைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
பாதாம் – 10
உலர் திராட்சை – 10
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை :
• பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வாணலியில் தினையை கொட்டி வாசனை வரும் வரை சிவக்க வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
• நெய்யில் திராட்சை, பாதாமை போட்டு வறுத்து கொள்ளவும்.
• வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் பாதாம், திராட்சை, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கலந்து தேனை விட்டு பிசையவும்.
• அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.