29.6 C
Chennai
Sunday, Sep 29, 2024
201610310838092290 how to make rasgulla SECVPF
இனிப்பு வகைகள்

தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது ரசகுல்லா. இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பால் – 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 மற்றும் 3/4 கப்
ஐஸ் கட்டிகள் – 4-5
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் பொடி – 1
சிட்டிகை பிஸ்தா – 4

செய்முறை :

* முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும்.

* ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மெல்லிய துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, நீரில் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.

* பின் அதில் உள்ள நீர் முற்றிலும் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும். பின்னர் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை மென்மையாக பிசைய வேண்டும்.

* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

* பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்

* இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி!!!201610310838092290 how to make rasgulla SECVPF

Related posts

குலோப் ஜாமுன்

nathan

பால் கொழுக்கட்டை

nathan

தேன்குழல் – ஜாங்கிரி

nathan

இனிப்பு சக்க பிரதமன்

nathan

நவராத்திரி ஸ்பெஷல் வேர்க்கடலை வெல்ல லட்டு

nathan

ஆப்பிள் அல்வா

nathan

சுவையான மைதா மில்க் பர்பி

nathan

இனிப்பான வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி

nathan

கோதுமை அல்வா

nathan