மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஃப்ரூட்ஸ் கேசரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
ரவை – ஒரு கப்,
சர்க்கரை – ஒரு கப்,
நெய் – அரை கப்,
கேசரி கலர் பொடி – ஒரு சிட்டிகை,
பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் – அரை கப்,
முந்திரி, திராட்சை – தேவையான அளவு.
செய்முறை:
* கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
* பின்னர் அதே நெய்யில் ரவையை போட்டு வறுத்து கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.
* நன்றாக கொதி வந்த பின் ரவையை சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
* சர்க்கரை நன்றாக கரைந்த பின் நெய், பழ வகைகள், முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* சுவையான தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி ரெடி.