நம்மில் ஒவ்வொருவரும் இயற்கை தந்த அழகிற்கு அழகு சேர்க்க, புது பொலிவு சேர்த்து மேலும் அழகுடன் திகழ பெரு முயற்சி மேற்கொள்கிறோம். இது தொடர்பான முயற்சியில் எது சரியான வழிமுறை என்று அறிய முன்பு புத்தகங்களின் உதவியை நாடினோம்; இன்று கூகுளின் உதவியை நாடி நிற்கிறோம்.
கூகுளில் கிடைக்கும் பல வலைத்தள முகவரிகள் மூலமாக நாம் பெறும் தகவல்கள் உண்மையானவையா என்று அறியாது அதை அன்றாட வாழ்வில் செய்து வருகிறோம்.
இந்த வகையில், வலைதளங்களின் உதவியால் நாம் அறிந்து பயன்படுத்தி வரும் தவறான அழகு குறிப்புகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்தறியலாம் வாருங்கள்..!
1. தேங்காய் எண்ணெய் – முக ஈரப்பத்திற்கு
தேங்காய் எண்ணெயை முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பயன்படுத்துவது அத்துணை நல்லதல்ல. இந்த எண்ணெயை சமையலுக்கு, முடிக்கு, உடலின் வறண்ட சருமத்திற்கு என பயன்படுத்தலாம். ஆனால், முகத்தை பெருத்தவரையில், முகம் அதீத வறட்சி தன்மையை அடைந்தால் மட்டுமே இதை பயன்படுத்தவேண்டும்.
2. எலுமிச்சை – இறந்த செல்களை நீக்க..
எலுமிச்சையை சாறாய் தயாரித்து முகத்தில் தடவி இறந்த செல்களை அகற்றுவது என்பது சற்று அபாயமானதே! ஏனெனில், எலுமிச்சை சாறு பூசிய முகத்தில் சூரிய ஒளி படுமாறு நேர்ந்தால், வேதி வினை நிகழ்ந்து முகத்தில் நிற மாற்றம், தடுப்புகள், தீவிர எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.
3. சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா
இந்த மூன்றும் முகத்தின் நிற மாற்றத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது. இந்த மூன்றையும் முகத்தின் அழகை மேம்படுத்த பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல; இதை உடலுக்கு பயன்படுத்துகையில் கூட, சரும வகை அறிந்து பயன்படுத்துதல் வேண்டும். இது அதிக எரிச்சல், தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதால் இதனை முகம் மற்றும் உடலுக்கு தவிர்ப்பது நல்லது.
4. பற்பசை – பருக்களை போக்க..
பருக்களை போக்க அதன்மீது பற்பசையை பூசுவது, பருக்களை போக்குவதற்கு பதிலாக, அவற்றை அதிகரித்துவிடும்; அவற்றின் வீரியத்தை அதிகரித்து விடும். பருவின் மீது பற்பசையை தடவினால், பற்பசையிலுள்ள பேக்கிங் சோடா, பெராக்ஸைடு போன்றவை முகத்தில் சிவந்த தடுப்புகளையும், எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும்; மேலும் வாயைச் சுற்றிலும் புண்களையும் ஏற்படுத்தக் கூடும்.
5. வெள்ளைக்கரு – முகத்திற்கு!
முகத்திற்கு பச்சை முட்டையின் வெள்ளைக்கருவை தடவி, முகத்தின் இறுக்கத்தை குறைக்க எண்ணுவது முட்டாள்தனம்; இது சால்மோனெல்லா எனும் குடற்காய்ச்சலை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டது. எதை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ, அதை அதற்கு பயன்படுத்த அறிந்து கொள்ளுங்கள்! முகத்தில் பொருத்தம் அற்ற பொருட்களை பயன்படுத்தினால், எதிர்பாராத கெடுதல் விளைவிக்கும் விளைவுகள் தான் ஏற்படும்.
6. ராஷ் கிரீம் – தடுப்புகளை போக்க
டையப்பர் போன்றவற்றை பயன்படுத்துவதால் உடலுள் ஏற்படும் தடுப்புகள், தடங்களை போக்க ராஷ் கிரீம் உபயோகிப்பது நல்லதல்ல; ஏனெனில் இதில் சிந்தெடிக் பீஸ்வாக்ஸ், பராபின், மற்ற எண்ணெய்கள் கலந்திருப்பதால் இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கலாம். உடலில் தடிப்புகள் ஏற்பட்டால் அவற்றை குணப்படுத்த இயற்கை முறையில், எண்ணெய் போன்ற விஷயங்களே போதுமானது, இந்த கிரீம் எல்லாம் பயன்படுத்துவதை தவிர்க்க முயலவும்.
7. டியோட்ரண்ட் – எண்ணெய்யை கட்டுப்படுத்த..
உடலிற்கு டியோட்ரண்ட் பயன்படுத்துவதால், வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பியை கட்டுப்படுத்தி, புத்துணர்வாக இருக்கலாம் என்று எண்ணுவது பாதி சரி, பாதி தவறு. ஏனெனில் உடலுக்கு பயன்படுத்தும் டியோட்ரண்ட் வியர்வையை மட்டுமே கட்டுப்படுத்தும், எண்ணெய் சுரப்பதை அல்ல. டியோடரண்ட் பயன்படுத்துவது அத்தனை நல்லது அல்ல; சிந்தித்து செயலாற்றுங்கள்!
மேலும் படிக்க: இந்த ஒரு பொருள் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் என்பது தெரியுமா?
8. டோட்டிங் பசை – கருமையை போக்க
நெற்றியின் கருமையை போக்க இந்த டோட்டிங் பசை பயன்படுத்துவது சரியானதல்ல; ஏனெனில் இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடக் கூடும். உடலின் பாகங்களில் ஏற்படும் கருமையை போக்க எத்தனையோ பல இயற்கை வழிகள் உள்ளன; ஆகையால் இந்த தேவையற்ற செயற்கை வழி வேண்டாம்..!
9. டோனிங் – ஆல்கஹாலை உபயோகித்து..
சருமத்தின் அழகை கூட்ட ஆல்கஹாலை தடவுவது எதிர் வினையை உடலில் உண்டாக்கலாம்; ஆல்கஹாலை சருமத்தில் தடவுவதன் மூலம், இது சருமத்தின் வறட்சியை கூட்டி, எண்ணெய் சுரப்பையும் அதிகப்படுத்தி விடலாம். டோனிங் என்ற முறையில் கண்டதையும் முகத்தில் தடவி முக அழகை கெடுத்து விட வேண்டாம் தோழிகளே! எந்த ஒரு புது அழகு சாதன குறிப்பை படித்து தெரிந்தாலும் முழு விவரம் அறிந்த பின் அதை பயன்படுத்தவும்