பொதுவாக நமது இல்லங்களில் நாம் இருக்கும் சமயத்தில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நமது பெற்றோர்கள் நமக்கு எண்ணெயை தேய்த்து பின்னர் குடிக்கச் சொல்வார்கள்.
இது மட்டுமல்லாது அந்த சமயத்தில் பண்டிகை நாட்கள் ஆன பொங்கல்., தீபாவளி போன்ற பண்டிகை வந்தாலும் அது போன்ற செய்வார்கள். எந்த பண்டிகைக்கு செய்கிறோமோ இல்லையோ தீபாவளி பண்டிகைக்கு கண்டிப்பாக நமது பெற்றோர்கள் நாம் எங்கு ஓடி ஒளிந்தாலும் நம்மைத் தேடி பிடித்து எண்ணையை தேய்த்து குளிக்க வைப்பார்கள்.
நமது உடலை பாதுகாப்பதில் உள்ள மருத்துவ மகத்துவம் என்னவென்றால்., நமது உடலில் இத்தனை நாட்கள் எண்ணெய் தேய்க்காமல் குளிக்காமல் இருந்த அந்த நிலையில் நமது உடலின் வெப்பம் மற்றும் உடலில் சேரும் அதிகப்படியான அழுக்குகள் அனைத்தும் இதன் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
இதனை எண்ணெய்யை தேய்த்து குளித்த பின்னர் நாம் உணர்ந்திருக்கலாம்., தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து நன்றாக நீரில் குளித்து எண்ணெய் பிசுக்கள் அனைத்தையும் வெளியேற்றிய பின்னர் சாப்பிடும்போது என்றளவும் இல்லாத அதிகப்படியான சாப்பாடு மற்றும் அதிகப்படியான உறக்கத்தை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏனென்றால் எண்ணையை தேய்த்து குளித்தவுடன் உடலில் இருக்கும் அழுக்குகள் மற்றும் வெப்பங்கள் வெகுவாக குறைவதால் நமது உடலுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது., இதன் மூலமாக பிற நாட்களில் நமது உடல் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ள உதவுகிறது. அந்த வகையில்., எந்தெந்த தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்ன நன்மையை தரும் என்பதை பற்றி நாம் இனி காண்போம்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஆண்களுக்கு:
ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் இருதயத்தில் தாபம் வரும்.
திங்கள்கிழமை மேற்கொள்ளப்படும் எண்ணை குளியலின் மூலமாக நமது மேனியானது பொலிவு பெறும்.
செவ்வாய்க்கிழமை எண்ணையை தேய்த்து குளித்துவந்தால் அருள் கிடைக்கும்.
புதன் கிழமை எண்ணெய்யை தேய்த்து குளித்து வந்தால் செல்வ நிலை அதிகமாகும்.
வியாழக் கிழமை என்னை தேய்த்து குளித்துவந்தால் தரித்திரம் தாண்டவமாடும்.
வெள்ளி கிழமை என்னை தேய்த்து குளித்து வந்தால் ஆபத்தை தரும்.
சனி கிழமை எண்ணெய்யை தேய்த்து குளித்துவந்தால் தீர்க்காயுள் தரும்.
எண்ணெய் தேய்த்து குளித்து வரும் பெண்களுக்கு:
செவ்வாய்க் கிழமை என்னை தேய்த்து குளித்துவந்தால் பாக்கிய விருத்தி பெறும்., வெள்ளிக் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் சௌபாக்கியமாக வாழ்வார்…