செ.தே.பொ :-
நற்சீரகம் – 1 மே.கரண்டி
மிளகு – 1 தே.கரண்டி
கொத்தமல்லி – 1 தே.கரண்டி
தக்காளி – பெரிது 1 (நறுக்கி)
கறிவேப்பிலை – 1 நெட்டு
கடுகு – 1/2 தே.கரண்டி
பெருஞ்சீரகம் – 1தே.கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
உள்ளி – 3 பல்லு (நசுக்கி)
உப்பு – தேவையான அளவு
செ.மிளகாய் – 1 (3 துண்டாக்கி )
பழப்புளி – 1 பாக்களவு
தண்ணீர் -2 கப்
எண்ணெய் – 1 தே.கரண்டி
செய்முறை :
* தண்ணீரில் புளியைக் கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
* மிளகு, நற்சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை பவுடராக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் சட்டியை வைத்து, சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ,உள்ளி ஆகியவற்றை போட்டு சூடாக்கவும்.
* கடுகு வெடித்ததும், செ.மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், இடித்து வைத்த கலவை போட்டு தாளிக்கவும்.
* தக்காளி அவிந்து திரளும் போது புளிக்கரைசலையும் விட்டு, தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொத்தி வந்ததும் இறக்கவும்.
** தக்காளி கூடுதலாக விரும்பின் சேர்க்கலாம்.