உங்கள் முகத்தை கண்ணாடி போல் பளப்பளப்பாக மாற்ற உதவுகிறது இந்த தக்காளி பேஷியல்.
உருளைக்கிழங்கு துருவல் சாறு மற்றும் தக்காளி விழுது இரண்டையும் கலந்து கொள்ளவும். கலந்த இந்த பேஸ்ட்டை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ச்சியாக இதை செய்து வந்தால், சில நாட்களிலேயே சரும வித்தியாசத்தை உணர முடியும்.
ஒரு சிலருக்கு முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் சற்று பொலிவிழந்து காணப்படும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சைதான் இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளி சாறுடன் கால் ஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளவும். பின்னர் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் விரைவில் முகம் பிரகாசித்து காணப்படும்.
கோடை வெயில் ஆரம்பமாகி விட்டது. இந்த காலங்களில் தக்காளியை கொண்டு முகத்தை பேஷியல் செய்து வந்தால் வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்