பாசுமதி அரிசி – 1 கப்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சைப் பட்டாணி – அரை கப்,
சோயா உருண்டைகள் -முக்கால் கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
தக்காளி (விருப்பப்பட்டால்) – 1,
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு,
ஏலக்காய் – தலா 2, பிரியாணி இலை – 1.
அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைத்து, வடிகட்டி, 1 டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும். மீதி நெய் அல்லது எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கிச் சேர்க்கவும். இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கரம் மசாலா, தக்காளி, பட்டாணி சேர்க்கவும். சோயா உருண்டைகளை 5 நிமிடங்கள் வெதுவெது நீரில் போட்டு, பிழிந்து எடுத்துச் சேர்க்கவும்.
அரிசியும் சேர்த்து, ஒன்றுக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும். தயிர் பச்சடி அல்லது சாஸுடன் பரிமாறவும்.