என்னென்ன தேவை?
பொடித்த சோயா – 1/2 கப்,
பெரிய உருளைக்கிழங்கு – 1,
பொடித்த இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை – தலா 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பிரெட் தூள் அல்லது வறுத்த கடலை மாவு – 1/2 கப்,
முந்திரி, திராட்சை – தலா 6 (நறுக்கியது),
பச்சைப்பட்டாணி – 1/4 கப்,
வறுத்து பொடித்த சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பச்சைப்பட்டாணியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடத்திற்கு மூடிவைத்து பின் வடித்து வைக்கவும். சோயாவை இரண்டு முறை கழுவி, சூடான தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி நன்கு பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், சாட் மசாலாவைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, விருப்பமான வடிவத்தில் டிக்கிகளாக செய்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்பு எடுத்து 10 நிமிடத்திற்கு ஆறவிட்டு, நான்ஸ்டிக் தவாவை சூடு செய்து சிறிது எண்ணெய் விட்டு டிக்கிகளை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். மேலே சாட் மசாலாத்தூள் தூவி, புதினா சட்னியுடன் பரிமாறவும்.