31.2 C
Chennai
Tuesday, Nov 5, 2024
ld3718
தையல்

சூப்பர் லெக்கிங்ஸ்

நைட்டி மோகம் மலையேறி, இது லெக்கிங்ஸ் காலம்! வேலைக்குச்செல்லவும் வீட்டில் இருக்கவும் வசதியான உடையாக மாறிக் கொண்டிருக்கிறது லெக்கிங்ஸ். குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமான உடையாகவும் இருப்பதால் அதன் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லெக்கிங்ஸ் தைத்து விற்பனை செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்து வருகிறார் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த தபித்தாள்.

9வதுதான் படிச்சிருக்கேன். தையலைத் தவிர வேற எதுவும் தெரியாது. குழந்தைங்களுக்கான பாவாடைச் சட்டை, ஃபிராக், சல்வார், ஜாக்கெட், ஆண்களுக்கான சட்டைனு எல்லாம் தைப்பேன். `இவ்ளோ தைக்கிறீங்களே… அப்படியே லெக்கிங்ஸும் தச்சா என்ன… கடையில வாங்கறது தையல் விட்டுப் போகுது. அளவு சரியா இல்லை… நிறைய கம்ப்ளெயின்ட் இருக்கு’னு நிறைய பேர் சொன்னாங்க. அப்புறம்தான் லெக்கிங்ஸ் பேட்டர்ன் கத்துக்கிட்டு, பண்ண ஆரம்பிச்சேன்.

வாடிக்கையாளர்கள் சொல்ற பொதுவான குறைகள் எதுவும் இருக்கக்கூடாதுங்கிற தெளிவோட தச்சுத் தரேன். பனியன் கிளாத், எலாஸ்டிக், தையல் மெஷின்…. இந்த மூணும்தான் தேவை. பனியன் துணியை திருப்பூர்லேருந்து கிலோ கணக்குல வாங்கறேன். தரத்தைப் பொறுத்து கிலோ 300 முதல் 500 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 3 முதல் 4 லெக்கிங்ஸ் தைக்கலாம்.

ஒரு நாளைக்கு 8 பீஸ் தைக்க முடியும். சிலர் நைசான மெட்டீரியல்ல கேட்பாங்க. சிலர் திக் மெட்டீரியல்ல கேட்பாங்க. அதைப் பொறுத்து 250 ரூபாய்லேருந்து 400 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகிதம் லாபம் நிற்கும்…” என்கிற தபித்தாளிடம், ஒரே நாள் பயிற்சியில் ஒரு மாடல் லெக்கிங்ஸ் தைக்கக் கற்றுக் கொள்ள மெட்டீரியலுடன் சேர்த்து கட்டணம் 750 ரூபாய்.ld3718

Related posts

சுடிதார் தைப்பது எப்படி?Tops

nathan

சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி?

nathan

பேட்ச் ஒர்க் குஷன் கவர்

nathan

ழந்­தை­க­ளுக்­கான படுக்கை விரிப்­பு (Cot Sheet)

nathan

How to make a dress for girls

nathan

குறுக்குத் தையல்

nathan

கைகொடுக்கும் கிராஃப்ட்!

nathan

சுடிதார் தைப்பது எப்படி?

nathan

எம்ப்ராய்டரி

nathan