சோம்புவைப் பொடி செய்து வெந்நீரில் போட்டுக் குடிக்கலாம். அடிக்கடி உணவில் சேர்க்கலாம். சாப்பிட்ட பின் சிறிதளவு சோம்பை மென்று தின்பது நல்லது. வயிறு உப்புசம் இன்றி நன்றாக இருக்கும். செரிமானத்திற்கு உதவும், வாய் துர்நாற்றம் நீங்கும்.
பருப்பு உசிலி செய்யும் போது பீன்ஸ், கொத்தவரைக்கு பதில் முட்டைக்கோஸை சேர்க்கலாம். இது கேன்சர் நோயை கட்டுபடுத்தும்.
வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.
பொட்டுக்கடலை மாவு, தேன், தேங்காய் துருவல், பேரீச்சம்பழம் கலந்து உருண்டை பிடித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான தின்பண்டம் இது
தர்பூசணி, வெள்ளரி சிறு துண்டுகள், ஒரு பெரிய நெல்லிக்காய் மூன்றையும் அரைத்து அத்துடன் மிளகுத்தூள், சர்க்கரை சேர்த்து குடிக்க உடல் புத்துணர்ச்சி பெறும்.
சேமியா கேசரி செய்யும்போது முதலில் தண்ணீரை மட்டும் ஊற்றி கொதிக்க வைத்து சேமியாவை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துவிட்டு அதன்பின் சேமியாவுடன் நெய், சர்க்கரை, முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறினால் கேசரி ஆறிய பின்னும் உதிர் உதிராக இருக்கும்.
தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால், தக்காளி குருமா வாசனையுடன், சுவையாகவும் இருக்கும்.
கொழுந்து வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி நன்றாக அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் கட்டினால் நகச்சுற்று குணமாகிவிடும்.
காலை உணவிற்கு முன்பு தினமும் ஒரு தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்