முகம் பளபளக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இயற்கை அழகே சிறந்தது என கருதப்படுகின்றது.
அந்தவகையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நமது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு, இயற்கையில் உள்ளது சூப்பரான டிப்ஸ் இதோ!
- ஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கி அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து தினமும் இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு அடையும்.
- பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
- தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.
- சிறிதளவு வெண்ணை எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.
- நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
- பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
- தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
- பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
- உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
- கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்