வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையான ஸ்நாக்ஸ் செய்வது கொடுக்க விரும்பினால் இந்த பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி செய்து கொடுக்கலாம்.
சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி
தேவையான பொருட்கள் :
பெரிய உருளைக்கிழங்கு – 3
உப்பு – தேவைக்கு
மிளகு – கால் தேக்கரண்டி (பொடித்தது)
ஸ்டஃப்பிங் செய்வதற்கு :
பச்சை பட்டாணி – 2/3 கப்
இஞ்சி – சிறிய துண்டு,
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி (தேவையெனில்)
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – அரை கப்
செய்முறை :
* உருளைக்கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும். ரொம்பவும் வேக வைத்துவிட கூடாது.
* மிளகை பொடித்து கொள்ளவும்.
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்க வேண்டும். 10 உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
* சீரகத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
* பட்டாணியுடன் இஞ்சி, கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், சீராக பொடி சேர்க்கவும்.
* எல்லாவற்றையும் சேர்த்து நன்கு மசித்து விட்டு பிசைந்து வைக்கவும். 10 பகுதியாக பிரித்து வைக்கவும்.
* கையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துக் கொண்டு உருளை உருண்டையை தட்டி நடுவில் பட்டாணி கலவையை வைத்து மூடி (கொழுக்கட்டை போல் மூடி) வேண்டிய வடிவத்தில் தட்டி வைக்கவும். இதைப் போல் எல்லா உருளைக்கிழங்கு உருண்டையிலும் கலவையை வைத்து வட்டமாக தட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கு டிக்கியை அடுக்கவும்.
* ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுக்கவும்.
* கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு டிக்கி ரெடி.