வெண்டைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அத்தகைய வெண்டைக்காய் அதிக ருசியுடனும் இருக்கக்கூடியது. மேலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை கொடுப்பது மிகவும் நல்லது. அதிலும் அதனை பொரியல் செய்து கொடுப்பது இன்னும் சிறந்த வழி.
இங்கு வெண்டைக்காய் பொரியலை தேங்காய் பயன்படுத்தி எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன்.
Ladies Finger Poriyal Using Coconut
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 15 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
தேங்காய் – 1/2 கப்
வரமிளகாய் – 2
பூண்டு – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் சின்ன வெங்காயம் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் உப்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு வெண்டைகாயை வதக்கி, பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் பொரியல் ரெடி!!!