மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசைக்கு நல்ல பொருத்தமானது. இப்போது மொச்சை கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான மொச்சை கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள் :
மொச்சை – 1/2 கப்
கத்திரிக்காய் பிஞ்சாக – 6
பூண்டு – 7 பல்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 1
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் – 1/4
புளிச்சாறு – 2 மேஜைக்கரண்டி
சாம்பார் மிளகாய்ப்பொடி (அல்லது) தனி மிளகாய்த்தூள் – 2 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் – 1 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
செய்முறை :
* மொச்சையை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
* கத்திரிக்காயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் புளிச்சாறு, மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
* கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
* குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.