மாங்காய் ரசம் வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்
தேவையான பொருட்கள் :
மாங்காய் – 2,
துவரம் பருப்பு – கால் கப்,
பச்சை மிளகாய் – 6,
மிளகு சீரகத் தூள் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தாளிப்பதற்கு :
சீரகம்,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயம்,
நெய் – 1 ஸ்பூன்.
செய்முறை :
* பருப்பை வேகவைத்துக் குழைத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
* மாங்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.
* மாங்காய், பச்சை மிளகாயைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில், மசித்த மாங்காய், பருப்புத் தண்ணீர், மிளகு சீரகத் தூள், உப்பு போட்டு லேசாகக் கொதிக்கவிடவும். நுரைத்து வந்தாலே போதும்.
* கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
* சூப்பரான மாங்காய் ரசம் ரெடி.