பூசணிக்காயை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் பெரும்பாலும் கூட்டு, பொரியல் போன்றவற்றை தான் செய்வோம். இங்கு பூசணிக்காய் கொண்டு செய்யக்கூடிய புளிப்பு மற்றும் இனிப்புச் சுவை கலந்த ரெசிபி ஒன்றைக் கொடுத்துள்ளோம்.
அதனை விரதம் மேற்கொள்ளும் நேரங்களில் செய்து சாப்பிடலாம். இப்போது பூசணிக்காய் கறி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசணிக்காய் – 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மாங்காய் துள் – 2 டீஸ்பூன்
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன் (தட்டியது)
கல் உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு தாளித்து, பின் அதில் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு 3-4 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சீரகப் பொடி, உப்பு, மாங்காய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றி கிளறி, தட்டு கொண்டு மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பூசணிக்காய் கறி ரெடி!!!