முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 1 கப்
முருங்கைக்கீரை – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று
பட்டை – ஒரு துண்டு,
பிரிஞ்சி இலை – ஒன்று,
கிராம்பு – 2,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – சிறிய துண்டு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* பாசுமதி அரிசியைத் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
* அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி… பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்.
* கீரை சற்று வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* அடுத்து அதில் அரிசி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
* சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ் ரெடி.