இந்த செய்தி தொகுப்பில் சுவையான கல்யாண வீட்டு சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 3
உருளைக்கிழங்கு – 1
வாழைக்காய் – தேவையான அளவு
கேரட் – 1
பீன்ஸ் – 4
புளி கரைசல் – எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் – ஒரு கப்
சாம்பார் தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 1/2 ஸ்பூன்
வர மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு – 100 கிராம்
பெருங்காய தூள் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் – 2
மல்லித்தலை – சிறிதளவு
கறிவேப்பில்லை – சிறிதளவு
வெங்காயம் – 1
வெல்லம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 1
சுவையான கல்யாண வீட்டு சாம்பார் செய்முறை:
கடாய் அடுப்பில் வைத்து சூடாகிய பின் எண்ணெய் சேர்த்து வெங்காயம்,தக்காளி,காய்கறிகள் சேர்த்து எண்ணெய்யில் நன்கு வதக்கி கொள்ளவும்.அதன் பின்பு புலி கரைசல்,சாம்பார் தூள்,வரமிளகாய் தூள்,மல்லித்தூள்,தண்ணீர்,உப்பு சிறிதளவு சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு கொதி வரும் வரை காத்திருக்கவும்.பின்பு வேகவைத்து வைத்திருக்கும் துவரம் பருப்பு,தேங்காய் பேஸ்ட்,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு கொதிக்க விடவும்.இறுதியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் .அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு சாம்பார் ரெடி..