இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை – ஒரு கப்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு.
செய்முறை :
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து கொள்ளவும்.
* வறுத்த பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்.
* பொடித்ததை மறக்காமல் பேப்பரில் தட்டி ஆற வைத்த பின் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
* சூப்பரான கறிவேப்பிலைப் பொடி ரெடி.
* இட்லி தோசையுடன் பொடியை நல்ல எண்ணெயில் குழைத்து பரிமாறவும்.