காலையில் பலர் பிரட்டை தான் காலை உணவாக உட்கொண்டு வருகின்றனர். அப்படி பிரட்டை காலை உணவாக உட்கொள்பவர்களுக்கு ஒரு அருமையான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவென்றால் கடலை மாவை பயன்படுத்தி பிரட் டோஸ்ட் செய்வது தான்.
இந்த ரெசிபியை செய்வது மிகவும் ஈஸி. மேலும் வித்தியாசமான சுவையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த கடலை மாவு பிரட் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் – 4-5
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கடலை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
எள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் பிரட்டை தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி ஓரளவு நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் தடவ வேண்டும்.
அடுத்து ஒவ்வொரு பிரட் துண்டையும் எடுத்து, கடலை மாவில் பிரட்டி, பின் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கடலை மாவு பிரட் டோஸ்ட் ரெடி!!!