தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
பாசிப் பருப்பு – 2 மேசைக்கரண்டி
சோள மாவு – 4 மேசைக்கரண்டி
எள் – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
ப.மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
வெண்ணெய் – 50 கிராம்
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை அரை அணி நேரம் ஊறவைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ப.மிளகாய் மற்றும் இஞ்சி துண்டை மிக்சியில் போட்டு தனியாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, அரைத்து வைத்திருந்த பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வெண்ணெய்யை சிறிது சிறிதாக சேர்த்து மாவை கிளறவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, எள், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
இப்போது அதில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைய வேண்டும்.
5 நிமிடங்கள் கழித்து சப்பாத்தி திரட்டுவது போல் மாவை திரட்டி உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டி துண்டு போட்டு கொள்ளவும்.
அவற்றை சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தால் மொறுமொறுப்பான கோதுமை மாவு தட்டை ரெடி.
Courtesy: MalaiMalar