தேவையான பொருட்கள்:
* ரவா – 1/2 கப்
* தண்ணீர் – 1/2 கப்
* பொடித்த வெல்லம் – 1/2 கப்
* மைதா – 1/4 கப்
* கோதுமை மாவு – 1/4 கப்
* துருவிய தேங்காய் – 1/4 கப்
* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்து, அதில் அரை கப் நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப்போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான ரவா பணியாரம் தயார்.