செ.தே.பொ :-
* ரவை – 1 கப்
* சீனி – 1 கப்
* தண்ணீர் – 3 கப்
* நெய் – 5 மே.க
* எண்ணெய் – 2 மே.க
* கேசரிப்பவுடர் – தே.அளவு
* முந்திரி பருப்பு – 15-20
* முந்திரி வற்றல் – சிறிது
*ஏலக்காய்ப் பொடி – 1/4 தே.க
செய்முறை :-
* ரவையை 7 நிமிடம் குறைவான சூட்டில் வறுத்து வைக்கவும்.
* முந்திரிப் பருப்பையும் ,முந்தரி வற்றலையும் நெய்யில் பொரித்து வைக்கவும்.
* 3 கப் தண்ணீரில் கேசரிப்பவுடரை நன்றாக கலந்து வைக்கவும்.
* சட்டியை அடுப்பில் வைத்து , சட்டி சூடானதும் நெய்யையும் , எண்ணையையும் விட்டு அத்துடன் கலந்து வைத்திருந்த தண்ணீரையும் விட்டு கொதிக்க விடவும்.
* கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக போட்டு நன்றாக சேரும் வண்ணம் கிளறவும்.
* ரவை சேர்ந்ததும், சீனியையும் சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.
* சட்டியில் ஒட்டாத பதத்தில் வரும் போது முந்திரிப்பருப்பு, முந்திரி வற்றல், ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
* ஒரு தட்டில் பரவி விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
** ( விரும்பினால் எசென்ஸ் சேர்க்கலாம்.)