32.4 C
Chennai
Saturday, Sep 28, 2024
21 61abec4
சிற்றுண்டி வகைகள்

சுவையான ரச வடை செய்வது எப்படி…

ரச வடை எல்லோரும் விரும்பி உண்ணும் ஒரு சுவையான உணவு.

இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதனை வீட்டில் சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்
புளி –எலுமிச்சை அளவு
தக்காளி – 1 எண்ணம்
மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
மல்லி இலை – ஒரு கொத்து
கறிவேப்பிலை – இரண்டு கீற்று
ரசப்பூண்டு – 5 இதழ்கள்
மிளகு – 8 எண்ணம்
சீரகம் – ¾ ஸ்பூன்
பெருங்காயப் பொடி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – ¼ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
வடை செய்ய பட்டாணிப் பருப்பு – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 25 கிராம்
கறிவேப்பிலை – 5 கீற்று பெருஞ்சீரகம்– 2 ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள்
பச்சை மிளகாய் – 1 எண்ணம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
ரச வடை செய்முறை
முதலில் பட்டாணிப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிதட்டில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சுத்தம் செய்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

பட்டாணிப் பருப்பில் பாதியை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வெள்ளைப்பூண்டு, தேவையான உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

 

பாத்திரத்தில் அரைத்த விழுதைக் கொட்டி அதனுடன் மீதம் உள்ள பட்டாணிப் பருப்பு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வடை மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு மாவுக்கலவையை வடைகளாகத் தட்டிப் பொரித்துக் கொள்ளவும். புளியை ½ மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர் சேர்த்து கரைசல் தயார் செய்யவும். அதனுடன் தக்காளியை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

 

ரசப்பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, காம்பு நீக்கிய மிளகாய் வற்றல், மிளகுசீரகக் கலவை, பெருங்காயப் பொடி, உப்பு ஆகியவற்றை புளிக்கரைசலில் சேர்க்கவும்.

வாணலியில் நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து வெடித்ததும் புளிக்கரைசலை ஊற்றி தாளிதம் செய்யவும். கலவை நுரைத்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

சுவையான ரச வடை தயார்.

 

Related posts

சுவையான வெங்காய பொடி தோசை

nathan

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

nathan

பச்சரிசி பால் பொங்கல்

nathan

கோதுமை தேங்காய்ப்பால் பிரதமன்

nathan

10 நிமிஷத்தில் தித்திப்பான ஸ்வீட் ரெடி

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு

nathan

நார்த்தம்பழ சேமியா ரவா கிச்சடி

nathan

பால் அப்பம்

nathan

தீபாவளி லேகியம் செய்வது எவ்வாறு??

nathan