காய்கறிகளை குழந்தைகள் சாப்பிடாது. அவர்களுக்கு எப்படி சத்தான சுவையான வெஜிடபிள் தோசை செய்வது கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான வெஜிடபிள் தோசை
தேவையான பொருட்கள் :
இட்லி/தோசை மாவு – 3 கப்
குடைமிளகாய் – 1
கேரட் – 1
வெங்காயம் – 1
முட்டைக்கோஸ் துருவல் – 1/2 கப்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
தனியாதூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* குடமிளகாயைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
* முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.
* இதனுடன் மிளகுதூள், சீரகத்தூள், தனியா தூள், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிய பின் லேசாக ஆறவிட்டு தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மிதமான தணலில் வைத்து, கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.