கேரளா ரெசிபிக்களின் சுவையே எப்போதும் தனித்து தெரியும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சமைக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் தான். கேரளாவில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் கொண்டு தான் சமையல் செய்வார்கள். அதனால் அவர்களின் சமையல் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
அதிலும் அவர்கள் சமைக்கும் அசைவ உணவு கூட ருசியாக இருக்கும். இப்போது அவற்றில் ஒன்றான கேரளா சிக்கன் ப்ரையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். சரி, இப்போது அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Easy and Crisp Kerala Chicken Fry Recipe
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
சோம்பு பொடி – 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5-6
பூண்டு – 6-7 பற்கள்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் வரமிளகாய், சோம்பு பொடி, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கேரளா ஸ்டைல் சிக்கன் ப்ரை ரெடி!!!