28.6 C
Chennai
Tuesday, Nov 5, 2024
18 cow gram vada
சிற்றுண்டி வகைகள்

சுவையான காராமணி வடை

இதுவரை எத்தனையோ பருப்புக்களை கொண்டு வடை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குழம்பு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் வெள்ளைக் காராமணியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டிக்கிறீர்களா? இந்த வடை மற்ற வடைகளை விட மிகவும் சுவையாக இருக்கும்.

அதிலும் மாலையில் டீ/காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த வெள்ளைக் காராமணி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

வெள்ளைக் காராமணி – 1 கப்
வரமிளகாய் – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் காராமணியை நீரில் 4-5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன், வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், காராமணி வடை ரெடி!!!

Related posts

சுரைக்காய் தோசை

nathan

சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலா

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்

nathan

இலகுவான அப்பம்

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பேபிகார்ன்

nathan

பெப்பர் இட்லி

nathan

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்

nathan