என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி – 1 கப்
நெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
பட்டை – 2 செ.மீ. துண்டு
பிரிஞ்சி இலை – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1.5 கப்
எப்படிச் செய்வது?
முதலில் 30 நிமிடங்கள் பாசுமதி அரிசி ஊற வைக்கவும், பின் அதை வடிகட்டி எடுத்து வைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடான பின் சீரகம், பிரிஞ்சி இலை மற்றும் பட்டை சேர்க்கவும். அவை சூடான பிறகு வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி உப்பு சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் சமைக்கவும். பின் வடிகட்டிய அரிசி சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மூடி போட்டு மூடி 3 விசில் வந்த பின் இறக்கவும். சுவையான சீரக சாதம் ரெடி.