16 1481866942 neck
சரும பராமரிப்பு

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். சருமம் சீரான நிறம் பெற

கழுத்தில் போடும் நகைகளால், அல்லது பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு கழுத்து கருமையாகிவிடும். இந்த கருமையை அகற்றுவது அத்தனை எளிதல்ல. அதுபோல் சிலருக்கு மூக்கின் ஓரங்களிலும் கருமை உண்டாக்கும். இதற்கு க்ரீம் போடுவது தவறு. அதற்கான இந்த எளிய டிப்ஸ் பயன்படுத்திப் பாருங்கள் பலன் கிடைக்கும். அதுபோல் குளிர்காலத்தில் சருமத்தில் உண்டாகும் பலப் பிரச்சனைகளுக்கு இந்த குறிப்புகள் தீர்வளிக்கும் முயன்று பாருங்கள்.

கழுத்து நிறம் பெற :

தேங்காய்பால்- 3 ஸ்பூன் கசகசா- 2 ஸ்பூன் பால் – 1 ஸ்பூன்

கசகசாவை சில நிமிடங்கள் ஊற வைத்த பின் அரைத்துக் கொள்ளுங்கள் அதனுடன் தேங்காய்பால், பால் கலந்து கழுத்தில்த்டவுங்கள். கருமை இருக்கும் மற்ற இடங்களிலும் அதனை தேய்க்கலாம். 15 நிமிடம் கழுத்து கழுவுங்கள். வாரம் இருமுரை எப்படி செய்தால் சருமம் சீரான நிறம் பெறுவதோடு அருமையான டோனராகவும் இது செயல்படும்.

முகம் நிறம் பெற :

பப்பாளி பழ துண்டுகள் – 5 எலுமிச்சை சாறு அரை மூடி தேன்- 1 ஸ்பூன்

மேலே சொன்ன மூன்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். அரைத்த விழுதினை முகம் கழுத்து இரண்டிலும் அப்ளை பண்ணி 10 நிமிடம் கழித்து கழுவவும். வாரம் இருமுறை செய்தால் சருமம் நிறம் பெறும்.

கருவளையம் நீங்க :

பாதாம் எண்ணெய் 5 துளிகள் எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கருவளையத்தின் மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும் . இது நல்ல பலனை தரும்.

முகம் மின்னுவதற்கு :

1 ஸ்பூன் சந்தனப் பொடி, 2 ஸ்பூன் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் துாள் அரை ஸ்பூன், 1 ஸ்பூன் பால் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட்போல் செய்து முகத்தில் த்டவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும், தினமும் இருவேளை செய்தால் சருமத்தின் நிறம் மாறுவதுடன், பொலிவாக மின்னும்.

மூக்கிலிருக்கும் கரும்புள்ளிகள் மறைய :

சிறிதளவு உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.16 1481866942 neck

Related posts

கடுகை பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்

nathan

நச்சுன்னு 4 டிப்ஸ்..! வறண்ட சருமத்திற்கு இப்படியும் செய்யலாமா?

nathan

முதுகில் பருக்கள் வருவது ஏன்? அதை எப்படி அகற்றுவது???

nathan

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்…

nathan

தளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான முறையில் குளித்தல் எப்படி?

nathan

பால் தரும் பட்டு போன்ற சருமம்

nathan

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ்……

nathan

சிவந்த நிறம் பெற ஆசையா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

nathan