26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
23 1437637186 ivy gourd fry
சைவம்

சிம்பிளான… கோவைக்காய் ப்ரை

பலருக்கும் கோவைக்காய் பிடிக்காது. இதற்கு காரணம் அதனை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் இருப்பது தான். ஆனால் உண்மையில் கோவைக்காய் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒருமுறை சமைத்து சாப்பிட்டால், அடிக்கடி சமைத்து சாப்பிடத் தோன்றும்.

அதிலும் கோவைக்காயை சிம்பிளாக ப்ரை செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இந்த கோவைக்காய் ப்ரை, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த கோவைக்காய் ப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


23 1437637186 ivy gourd fry
தேவையான பொருட்கள்:

கோவைக்காய் – 250 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் கோவைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்டி, பின் அவற்றை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து பின் அதில் கோவைக்காயை சேர்த்து, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் கோவைக்காய் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின் தீயை குறைத்து, 15-18 நிமிடம் கோவைக்காய் ஓரளவு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து, பின் அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், கோவைக்காய் ப்ரை ரெடி!!!

Related posts

சுவையான செட்டிநாடு பலாக்காய் கறி

nathan

சிம்பிளான… காளான் கிரேவி

nathan

கத்திரிக்காய் பிரியாணி

nathan

பாகற்காய் பொரியல்

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

பனீர் கச்சோரி

nathan

வறுத்தரைத்த மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan