தேவையான பொருட்கள் :
டோஃபு – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
சோள மாவு – கால் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு :
பூண்டு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை
• பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• டோஃபுவை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
• ஒரு பாத்திரத்தில் டோஃபுவை போட்டு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி, பின் அதில் சோள மாவைத் தூவி பிரட்ட வேண்டும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், டோஃபுவை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
• பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கிய பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் சர்க்கரை சேர்த்து கிளறி, சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
• பிறகு அதில் வதக்கி வைத்துள்ள டோஃபுவை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி கிளறி இறக்கினால், சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு ரெடி!
Related posts
Click to comment