தேவையானப்பொருட்கள்:
மாவு, மைதா மாவு, சோள மாவு – 2 தலா டேபிள்ஸ்பூன்,
நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ் – தலா கால் கப்,
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்),
காய்ந்த ரொட்டித்தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்),
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
நறுக்கிய கோஸ், கேரட்டை ஐஸ் வாட்டரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும். கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து… உப்பு, மஞ்சள்தூள், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ரொட்டித்தூள் போட்டுப் பிசிறவும். கேரட், கோஸை ஒட்டப் பிழிந்து, பிசிறி வைத்த மாவோடு சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு, மாவை பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இது 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும். மொமொறுவென்று சூப்பர் சுவையில் அசத்தும் இதை, சாதத்துக்கு சைட் டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.