woman with home facial mask
சரும பராமரிப்பு

சவர்காரத்திற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்

வெயிலால் ஏற்பட்ட கருமை சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், வெயிலால் கருமையான சருமத்தை சரிசெய்ய முடியாது. ஆனால் அதுவே கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.

இறந்த செல்கள் நீங்கும் கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.

வெள்ளையான சருமம் கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அதனைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வர சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

பிம்பிளை சரிசெய்யும் முகப்பருவால் கஷ்டப்படுபவர்கள், கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.

கருவளையங்கள் பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பது. ஆனால் தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.

கரும்புள்ளிகள் உங்களுக்கு கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க கடலை மாவு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே கரும்புள்ளிகளைப் போக்க கண்ட பொருட்களைப் பயன்படுத்தாமல், கடலை மாவைக் கொண்டு அன்றாடம் முகத்தைக் கழுவுங்கள்.

சரும துளைகள் இறுக்கப்படும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமத் துளைகள் இறுக்கப்பட்டு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும்.
woman with home facial mask

Related posts

பால் ஆடை

nathan

கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்ட வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

ஃபிஷ் ஸ்பா அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்

nathan

உரோமங்களை அகற்ற ஈஸி வழி

nathan

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த சோப்பு உங்களுக்கு வயதாவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்குமாம்…

nathan

வசிகரமான முகத்தை பெற இதோ ஈஸியான சில டிப்ஸ்….!

nathan

நீங்கள் செய்யும் சில தவறுகள்தான் சரும பிரச்சனைகளுக்கு காரணம்!!

nathan

குழந்தை போன்ற மென்மையான சருமத்தை பெற சூப்பர் டிப்ஸ்

nathan