தலைமுடி மட்டுமின்றி சருமத்தை மிளிரவைக்கும் வல்லமை பீருக்கு உண்டு. இப்போது சருமத்தை அழகாக்கும் பீர் பேஷியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்
இன்றைய காலத்தில் முகத்திற்கு தேவையான பல பேஷியல்கள் வந்து விட்டன. பழங்கள், மூலிகை பொருட்கள், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தி பேஷியல்கள் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், கூந்தலில் பீரை ஊற்றி அலசுகிற ஸ்பா டிரீட்மெண்ட் அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் தலைமுடி மட்டுமின்றி சருமத்தையும் குளிர்ச்சியோடு மிளிரவைக்கும் வல்லமை பீருக்கு உண்டு.
சிறிதளவு வினிகர், தேனுடன் இரண்டு தேக்கரண்டி பீர் சேருங்கள். கெட்டியான கலவை கிடைக்கும். இதை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவி விடுங்கள். உங்களின் இயல்பான அழகு குறைந்தபட்சம் 50 சதவீதமாவது அதிகரித்து இருக்கும். பீரில் விட்டமின் பி சத்தின் செறிவு அதிகம். இது சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
ஒரு சிலருக்கு பனி, மழை காலத்தில் சரும வறட்சி, முகப்பிசுக்கு அதிகமாக தென்படும். அப்படிப்பட்டவர்களுக்கு பீர் பேஷியல் ஒரு சிறந்த மருந்து.