சர்க்கரை நோயாளிகளுக்கு சம்பா கோதுமை மிகவும் நல்லது. இப்போது சுவையான சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை – 1 கப்,
வெங்காயம், தக்காளி – தலா 1,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி – சிறிதளவு,
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2,
பிரியாணி மசாலா – கால் ஸ்பூன்
உப்பு, நெய் – தேவையான அளவு.
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சம்பா கோதுமையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை போன பின் தக்காளி, பச்சைமிளகாயைக் கீறிப் போட்டு வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கி, பிரியாணி மசாலா சேர்க்க வேண்டும்.
* காய்கறிகள் பாதியளவு வதங்கியவுடன் ஒரு கிளாஸ் சம்பா கோதுமைக்கு, மூன்று கிளாஸ் நீர் ஊற்றி கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சம்பா கோதுமையை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
* தண்ணீர் நன்றாக வற்றி வரும் போது கொத்தமல்லி, புதினாவை போட்டு இறக்கவும்
* சுவையான சத்தான சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.