d9b4f05a 2568 4257 8a9d 9dc72a5c6cbc S secvpf
சைவம்

சப்பாத்தி உப்புமா

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 4,
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

* கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

* நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம்.d9b4f05a 2568 4257 8a9d 9dc72a5c6cbc S secvpf

Related posts

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

சூப்பரான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

கோவைக்காய் அவியல்

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

சிம்பிளான… மோர் குழம்பு

nathan

சூப்பரான சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி?

nathan

சுவையான காளான் டிக்கா செய்முறை…!

nathan

பேச்சிலர் சமையல்: வெஜிடபிள் பிரியாணி

nathan

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan