குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இப்படி வித்தியாசமாக செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால் விருப்பி சாப்பிடுவார்கள்.
சுவையான சத்தான வெஜிடபிள் மோ மோ
தேவையான பொருட்கள் :
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பன்னீர் துருவியது – 200 கிராம்
வெங்காயம் – 150 கிராம்
இஞ்சி – 1 டீஸ்பூன்
பூண்டு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கோதுமை மாவு – 2 கப்
செய்முறை:
* கேரட், பீன்ஸ், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.
* அடுத்து அதில் கேரட், பீன்ஸ் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
* காய்கள் நன்றாக வதங்கியதும் சோயா சாஸ், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
* மைதா மாவை சிறு சிறு பூரிகளாகச் செய்து அதன் நடுவில் இந்த மசாலாவை வைத்து அனைத்து ஓரங்களையும் ஒன்றாக பிடித்து சற்று அழுத்தி வைக்கவும். அப்போது தான் மசாலா வெளியில் வராது.
* செய்து வைத்தவைகளை ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து பரிமாறவும்.
* வெஜிடபிள் மோ மோ ரெடி.
* கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவையும் பயன்படுத்தலாம்.