கேழ்வரகு அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் மொச்சை சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்,
தண்ணீர் – 2 ¼ கப்,
மொச்சை – 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு,
வெங்காயம் – 1
புளி – நெல்லிக்காய் அளவு.
தாளிக்க…
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை :
* மொச்சையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும்.
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை 1/4 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து தாளித்த பின், 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
* அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, உப்பை சேர்க்கவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது, ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும்.
* பிறகு அடுப்பை அணைத்து, வேக வைத்த மொச்சையை ராகி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
* ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, சாத்துக்குடி அளவு மாவை எடுத்து போளியை போல் தட்டிக்கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்ததை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு சூடாக பரிமாறவும்.
* சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி ரெடி.