சப்பாத்திக்கு தொட்டு கொள்ள பாலக் தயிர் பச்சடி சூப்பராக இருக்கும். இது சத்தானதும் கூட. இன்று பாலக் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான பாலக் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை – 1 கட்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – 1 கை பிடி
உப்பு – ருசிக்கு
தயிர் – 1 கப்
எண்ணெய் – 1/2 ஸ்பூன்
செய்முறை :
* பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் பாலக்கீரையை போட்டு வதக்கி சிறிது நீர் சேர்த்து வேகவைத்து ஆற வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக கடைந்த பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, வேக வைத்த பாலக்கீரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* இப்போது சூப்பரான பாலக் தயிர் பச்சடி ரெடி.